செய்திகள் :

Ilaiyaraaja: ``இளையராஜாவை கொண்டாட அரசு விழா!'' - அறிவித்த முதல்வர்!

post image

தனது 82-வது வயதில் முதல் சிம்பொனியை உருவாக்கி லண்டனில் அரங்கேற்றம் செய்துள்ளார் இளையராஜா. சிம்பொனி அரங்கேற்றிய தினம் தனது வாழ்நாளில் மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார்.

இளையராஜா சிம்பொனிக்காக தமிழகத்திலிருந்து புறப்படும் முன் அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து வாழ்த்தினர். அதேப்போல நாடு திரும்பிய அவருக்கு சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டது.

Ilayaraja, MK Stalin

இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Ilaiyaraaja பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

இது தொடர்பாக வெளியிடப்பட்ட முதலமைச்சரின் எக்ஸ் தள பதிவில், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!

ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இளையராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lokesh Kanagaraj: `உங்களின் நுண்ணறிவும், கதை சொல்லல் பேரார்வமும்' - `கூலி' படத்தில் ஆமீர் கான்?

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 60-வது பிறந்தநாள் இன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இன்று பிறந்தநாள். அவர் இயக்கி வரும் `கூலி' திரைப்படத்தில் ரஜினி, நாகர்ஜூனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "அப்போதான் LCU முடிவுக்கு வரும்" - லோகேஷ் கனகராஜின் லைன் அப் இதான்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் இன்று! கோலிவுட்டின் தற்போதைய `மோஸ்ட் வான்டென்ட்' டைரக்டர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பி... மேலும் பார்க்க

Kayadu Lohar: 'முதல்ல கீர்த்தி கேரக்டர்-லதான் நடிக்க சொன்னாங்க, ஆனா..'- டிராகன் குறித்து கயாடு லோஹர்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கயாடு லோஹர் அஸ்வத் மாரிமுத்துவி... மேலும் பார்க்க

Test: 'வருடக்கணக்கில் கிரிக்கெட் விளையாடிய வீரரைப்போல இருக்கிறார்' - சித்தார்த்தை பாராட்டிய அஷ்வின்

'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா', போன்ற படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் 'டெஸ்ட்'. இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். மாத... மேலும் பார்க்க

`என்னோட குறும்படத்தை விஜய் சேதுபதி சார் வெளியிட இதுதான் காரணம்' - 'மௌன வதம்' இயக்குநர் அமிர்த ராஜா

தனது நட்பு வட்டத்தில் உள்ள உதவி இயக்குநர்களின் குறும்படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும் விதமாக தனது 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்' சேனலில் வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான 'எழுதா கத... மேலும் பார்க்க

Sweetheart Review: இருவரின் உறவுச் சிக்கலும், அதனால் உண்டாகும் பிரச்னைகளும்! ஸ்வீட்டாக இருக்கிறதா?

சிறுவயதில் தன் தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால், காதல், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் உள்ளிட்ட சீரியஸ் ரிலேஷன்ஷிப்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் வாசு (ரியோ ராஜ்). மறுபுறம், இவற்றில் எல்ல... மேலும் பார்க்க