வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி!
வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி நடத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
அப்போது புத்தகக் காட்சி குறித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகின்றன. இதனை நாடே வியந்து பார்க்கிறது.
அடுத்த கட்டமாக, வெளிமாநிலங்களின் தலைநகரான தில்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், மும்பை போன்ற நகரங்களிலும், சீங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழ் புத்தகக் காட்சி நடத்தப்படும்.
இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.