மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
வரும் ஆண்டில் தமிழகத்தில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"வரும் ஆண்டில் தமிழகத்தில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன் வழங்கப்படும்.
சென்னை, கோவை, மதுரையில் ரூ. 275 கோடியில் மாணவியருக்கு 3 விடுதிகள் அமைக்கப்படும். இதை ஆதிதிராவிடர், சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மகளிர் விடியல் பயணத்திற்கு 3, 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள் விரைவில் பெறப்படும்.
மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.