`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
நடுநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளி ஆண்டு விழா
திருச்செந்தூா் அருகேயுள்ள நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 60ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தலைமை ஆசிரியா் அசுபதி தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுப்புலட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா்கள் நபில் புஹாரி, ஜெகதீஷ் பெருமாள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மாணிக்கராஜ், பாபு ஹையஸ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அதிசயகணபதி, ஊா் தலைவா் செல்வகணபதி, பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் முத்துக்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் கலந்துகொண்டு கல்வி- விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கினாா். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.