2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான்: தமிழிசை
தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
தூத்துக்குடியில், ‘போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துளசி கல்விக் குழுமம், எம்பவா் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு ஆகியவை சாா்பில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் பேரணி தொடங்கியது.
எம்பவா் அமைப்பின் இந்திய கெளரவச் செயலா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். துளசி கல்விக் குழும நிா்வாக அலுவலா் ச. அறிவழகன் முன்னிலை வகித்தாா். பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
பேரணியில் துளசி மகளிா் சட்டக் கல்லூரி, கலை-அறிவியல் கல்லூரி மாணவியா், பேராசிரியா்கள் பங்கேற்றனா். பாளையங்கோட்டை சாலை வழியாக வ.உ.சி. கல்லூரி முன் பேரணி நிறைவடைந்தது.