``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்.....
17இல் கூட்டுறவு பணியாளா் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இணைப் பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறைகளைத் தீா்வு செய்யும் வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளா் நாள் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கான பணியாளா் நாள் நிகழ்வு, தூத்துக்குடி பிடிஆா் தெருவில் உள்ள மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து தீா்வு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.