மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி
தொழில்முனைவோர்களாக 1 லட்சம் மகளிர்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோர்களாக்க உயர்த்திட பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை (2025-26)அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது,
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தொழில்முனைவோர்களாக 1 லட்சம் மகளிர்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோர்களாக்க உயர்த்திட பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் 20 சதவிகித மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
2025-26 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கான நிதியுதவிக்கென ரூ.225 கோடி ஒதுக்கப்படும் என்றார்.