செய்திகள் :

பெருசு விமர்சனம்: 'இப்படியெல்லாமா பிரச்னை வரும்?' - சிக்கலான அடல்ட் காமெடி சிரிக்க வைக்கிறதா?

post image

சாமிக்கண்ணு (சுனில்), துரை (வைபவ்) ஆகிய இருவரும் ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்ற பெருசு (எ) ஹாலாஸ்யத்தின் மகன்கள். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும் பெருசு, திடீரென இறந்து போகிறார். ஆனால், அவரது சடலத்தை வெளியே காட்ட முடியாத சிக்கல் உண்டாகிறது. இதனால் குடும்பமே சோகத்தில் ஆழ, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

பெருசு விமர்சனம்
பெருசு விமர்சனம்

மிகவும் துக்கமான நாள் அதிர்ச்சி நிறைந்த நாளாக மாற, இதைப் பெரிய அவமானமாக நினைத்து ஊர் மக்களிடமிருந்து இதை மறைக்க நினைக்கின்றனர். இந்தக் குழப்பத்துக்கு இடையே இறுதிச் சடங்கை எப்படி முடிக்கின்றனர், அந்த இறுதிச் சடங்கின்போது வெளிவரும் உண்மைகள் என்னென்ன என்பதே ‘பெருசு’ படத்தின் கதை.

ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் தடுமாறும் இடம், ஓரளவுக்குப் பொறுப்புணர்வு நடந்து கொள்ளும் தன்மை என அண்ணன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்கிறார் சுனில். குறிப்பாகத் தந்தையிடம் இறுதிவரை பேசாமலே இருந்துவிட்டதை எண்ணி குற்றவுணர்வு கொள்ளும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார் சுனில். அவருக்குத் தம்பியாகக் குடிகாரராக வரும் வைபவ், இரண்டாம் பாதியில் சிரிக்க வைத்தாலும், முதல் பாதியில் கதாபாத்திரத்தோடு ஒட்டாத செயற்கையான உணர்வையே கொடுக்கிறார். பாலசரவணன், முனீஷ்காந்த் காமெடி கூட்டணி ஆங்காங்கே சில நிமிடங்கள் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

கேமராவைப் பார்த்துப் பேசுவது போலவே நடித்துள்ள நிஹாரிகா நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. மற்றொரு நாயகியாக வரும் சாந்தினியின் நடிப்பில் பெரிதாகக் குறையேதுமில்லை. இறுதிக் காட்சியில் தனம், சுபத்ரா ஆகிய இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருப்பது கலகலப்பு! ஒரே ஒரு வசனத்தை 'நறுக்'கென்று பேசி கைதட்டல் வாங்குகிறார் சுவாமிநாதன். அடுத்தவரின் வீட்டில் உளவு பார்ப்பதாக வரும் ரமாவின் நடிப்பில் செயற்கைத்தன்மையே எட்டிப் பார்க்கிறது. இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

ஒரு சிறிய வீடு, அதற்குள் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் எனச் சிறிய இடத்தில், நேர்த்தியான கேமரா கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வைக் கொடுத்துக் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். அதைத் தொந்தரவு செய்யாமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சூரிய குமரகுரு. இருப்பினும் இரண்டாம் பாதியில் காமெடியிலிருந்து உணர்வுபூர்வமான காட்சிக்கு மாறும் இடங்களில் 'ஜம்ப்' அடிப்பதைச் சற்றே கவனித்திருக்கலாம். அருண்ராஜின் பின்னணி இசை நகைச்சுவை உணர்வுக்கு உதவியிருக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக வேலை செய்யவில்லை.

ஆரம்ப காட்சியிலே நேராகக் கதைக்குள் செல்லும் திரைக்கதை நம்மையும் ஈர்த்துக் கொள்கிறது. வார்த்தை விளையாட்டு, பிரச்னையையே கேலியாக மாற்றும் அவல நகைச்சுவை ஆகிய அஸ்திரங்களை வைத்து இதை அடல்ட் காமெடியாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம். ஆனால், 10-க்கு 5 என்ற விகிதத்தில் அதில் பாதிதான் வேலை செய்திருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் பிரச்னையின் தன்மையை விளக்குவது ஆரம்பத்தில் சிரிப்பைக் கொடுத்தாலும் போகப் போக ரீப்பீட் அடிக்கிறது. அதிலும் குடிகாரராக வைபவ்வின் ஃபர்பார்மன்ஸும், ரெடின் கிங்ஸ்லி எபிசோடும் செயற்கைத்தனத்தைக் கொட்டி அயற்சியைத் தருகின்றன.

இரண்டாம் பாதி ஆரம்பிக்க மீண்டும் 50-50 காமெடி மோடுக்குள்ளே சுற்றுகிறது திரைக்கதை. பாலாஜி ஜெயராமன் வசனங்கள் கிரேஸி மோகனின் கம்பிரஸ்ட் வெர்ஷனாக ஒரு சில இடங்களில் வெடித்து சிரிக்க வைத்தாலும், 'பாயின்ட்', 'மேட்டர்' என்று பல இடத்தில் வலுக்கட்டாயமாக மட்டுமே சிரிக்கச் சொல்கிறது. அதேபோல இயல்பான திரைமொழி இருக்க வேண்டிய படத்தில், கமர்ஷியல் பாணியிலான ட்ரீட்மெண்ட் துருத்திக்கொண்டே தெரிவது ஏமாற்றமே! குடும்ப மானத்தை அப்பாவின் மரணத்திலும் தேடும் நபர்களுக்கு, அப்பா இரண்டு மனைவிகள் வைத்திருப்பது நெருடலாகத் தெரியாதது நகைமுரண். அதை ஆண்மையின் பெருமையாக நிலைநிறுத்தும் வசனங்களும் தவிர்த்திருக்க வேண்டியவை!

மொத்தத்தில் ஒரு புதிய யோசனையில் ஆர்வத்தைத் தூண்டும் இந்த 'பெருசு', திரைக்கதையிலும் வசனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிஜமாகவே பெரிதாகக் கொண்டாடியிருக்கலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kayadu Lohar: 'முதல்ல கீர்த்தி கேரக்டர்-லதான் நடிக்க சொன்னாங்க, ஆனா..'- டிராகன் குறித்து கயாடு லோஹர்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கயாடு லோஹர் அஸ்வத் மாரிமுத்துவி... மேலும் பார்க்க

Test: 'வருடக்கணக்கில் கிரிக்கெட் விளையாடிய வீரரைப்போல இருக்கிறார்' - சித்தார்த்தை பாராட்டிய அஷ்வின்

'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா', போன்ற படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் 'டெஸ்ட்'. இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். மாத... மேலும் பார்க்க

`என்னோட குறும்படத்தை விஜய் சேதுபதி சார் வெளியிட இதுதான் காரணம்' - 'மௌன வதம்' இயக்குநர் அமிர்த ராஜா

தனது நட்பு வட்டத்தில் உள்ள உதவி இயக்குநர்களின் குறும்படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும் விதமாக தனது 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்' சேனலில் வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான 'எழுதா கத... மேலும் பார்க்க

Sweetheart Review: இருவரின் உறவுச் சிக்கலும், அதனால் உண்டாகும் பிரச்னைகளும்! ஸ்வீட்டாக இருக்கிறதா?

சிறுவயதில் தன் தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால், காதல், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் உள்ளிட்ட சீரியஸ் ரிலேஷன்ஷிப்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் வாசு (ரியோ ராஜ்). மறுபுறம், இவற்றில் எல்ல... மேலும் பார்க்க

Ilaiyaraaja: ``இளையராஜாவை கொண்டாட அரசு விழா!'' - அறிவித்த முதல்வர்!

தனது 82-வது வயதில் முதல் சிம்பொனியை உருவாக்கி லண்டனில் அரங்கேற்றம் செய்துள்ளார் இளையராஜா. சிம்பொனி அரங்கேற்றிய தினம் தனது வாழ்நாளில் மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார். இளையராஜா சிம்பொனிக்காக தம... மேலும் பார்க்க