தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரி ஆண்டு விழா
தூத்துக்குடி குறுக்குச்சாலையில் உள்ள கீதா ஜீவன் கலை -அறிவியல் கல்லூரியில் 7ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இளங்குமரன் தலைமை வகித்தாா். பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினா் மருத்துவா் மகிழ் ஜான், கல்லூரிச் செயலா் ஜீவன் ஜேக்கப் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் அப்துல் காதா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளிலும், மகளிா் தின நிகழ்ச்சியிலும் வெற்றிபெற்ற மாணவா்-மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். விழாவில், மாணவா் - மாணவியா், பேராசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.
உதவிப் பேராசிரியா் ரேவநந்தினி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் அக்சல் நன்றி கூறினாா்.