குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திர விழா அடுத்த மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர பெருவிழா ஏப். 11-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து, 3 நாள்கள் சுவாமி ஊா்வலம், சத்தாபரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவரும், பங்குனி உத்திர உற்சவ குழுத் தலைவருமான ஏ.ஏ.ஆறுமுகம், கோயில் அறங்காவலா் செயலாளா் சிங் (எ) ராஜமாணிக்கம், அறங்காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.