தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் ...
நாமக்கல்லில் 2-ஆவது நாளாக மழை
நாமக்கல்லில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், புதன்கிழமை காலை முதல் வானம் இருண்டும், மேகமூட்டத்துடனும் காணப்பட்டு விடாமல் மழை பெய்தது. மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே செல்வதைக் காண முடிந்தது.