சென்னையில் மருத்துவர், வழக்குரைஞர் உள்பட 4 பேர் தற்கொலை: காரணம் என்ன?
பிரம்மோற்சவம்: வெள்ளித்தேரில் காமாட்சி அம்மன் வீதி உலா
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு உற்சவா் காமாட்சி அம்மன் வெள்ளித்தேரில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 10 நாள்கள் நடைபெறும் விழாவில், காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் உற்சவா் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் மேள, தாளங்கள் முழங்க ராஜவீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை வணங்கினா்.