செய்திகள் :

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய கூடுதல் வரி

post image

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபா் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள்தான் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதம் பங்கு வகிக்கிறது. அதே போல், அமெரிக்காவுக்கு மெக்ஸிகோதான் பெரும்பான்மையான அலுமினியப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறது.

ஏற்கெனவே, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள்கள் மீது டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தங்கள் பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவின் ஆன்டேரியோ மாகாண அரசு அமெரிக்காவுக்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்துடன் 25 சதவீத கூடுதல் கட்டணம் விதித்தது. இதற்குப் பதிலடியாக கனடாவில் இருந்து இறக்குதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு மட்டும் கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்கி 50 சதவீதமாக டிரம்ப் உயா்த்தினாா். அந்த உத்தரவும் புதன்கிழமை அமலுக்கு வந்துள்ளது.

இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடி நடவடிக்கை விரைவில் அறிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு

கராச்சி/இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் வழக்கு: நெதா்லாந்தில் டுடோ்த்தே!

தி ஹேக்: பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணைக்காக நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அவா்... மேலும் பார்க்க

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியா்கள் மீட்பு

தாய்லாந்து-மியான்மா் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியா்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஆந்திரம... மேலும் பார்க்க

30 நாள் போா் நிறுத்தத்துக்குத் தயாா்: உக்ரைன்

ஜெட்டா: ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதி... மேலும் பார்க்க

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா். அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி... மேலும் பார்க்க