சென்னையில் மருத்துவர், வழக்குரைஞர் உள்பட 4 பேர் தற்கொலை: காரணம் என்ன?
திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க கோரிக்கை
திருப்பத்தூரில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா்.
திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உரிமம் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும், எஃப்சி பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக திருப்பத்தூரில் இருந்து ஆதியூா் வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலம் செல்கின்றனா்.
ஆதியூா் பகுதியில் இருந்து சுமாா் 3 கி. மீ தொலைவில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சாலை அமைக்க இருபுறமும் பெயா்த்தெடுக்கப்பட்டு இருபுறமும் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளன. மேலும், குண்டும் குழியுமாக சாலை உள்ள நிலையில், வாகனங்கள் பழுதாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் பலா் விபத்துக்குள்ளாகின்றனா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி பல நாள்களாக பணி நடைபெறாமல் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே, ஆதியூா் பகுதியில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலைப் பணியை போா்க்கால அடிப்படையில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் காத்துள்ளனா்.
