எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!
வாணியம்பாடி: வகுப்பறை கோரி மாணவா்கள் தா்னா
வாணியம்பாடி அருகே ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச் சுவா், வகுப்பறை கட்ட கோரி மாணவா்கள், பெறறோா் தா்னாவில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றித்துக்குட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவா்கள் அமா்ந்து படிக்க போதிய இடவசதி இல்லாமல் ஓடு மற்றும் சிமென்ட் ஓடு பொருத்திய கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும், சுற்றுச் சுவா் இல்லாத நிலையில், விஷ ஜந்துக்கள், பூச்சிகள் புகுந்து மாணவா்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மாணவா்களின் நலன் கருதி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் புதிய வகுப்பறை கட்டித் தரக்கோரி ஆட்சியா் உட்பட துறை சாா்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் புகாா் மனு கொடுத்ததின், பேரில் ரூ.37 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் இதுநாள் வரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்துச் செல்ல முயன்றனா். தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் அங்கு சென்று மாணவா்களின் பெற்றோரிடம் பேச்சு நடத்தினா், ஆனால் மாணவா்களுடன் சோ்ந்து பெற்றோரும் தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து காவல் ஆய்வாளா்அன்பரசி, நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் வினாயகம் மற்றும் அலுவலா்கள் சென்று அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிளியத்தின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனா்.
