செய்திகள் :

பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!

post image

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டெடுத்த நிலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.

ரயில் சிறைப்பிடிப்பு:

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.

குவெட்டாவில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கூடலர் மற்றும் பிரு குன்றி மலைகளுக்கு இடையிலான சுரங்கத்தில் ரயில் நுழைந்தபோது ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பலூச் அமைப்பினர், தண்டவாளத்தை வெடிபொருள் வைத்து தகர்த்து ரயிலை சிறைப்பிடித்தனர்.

இந்த ரயிலின் 9 பெட்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

இதனைத் தொடார்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட மீட்புப் பணியின்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இருதரப்பிலும் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து முதல்கட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 155 பேர் மீட்கப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பயணிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டதாகவும், 50 பேர் கொல்லப்பட்டதாகவும் பலூச் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் உண்மையல்ல எனத் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் முயற்சியால் பயங்கரவாதிகள் 33 பேர் கொல்லப்பட்டனர்.

மீட்புப் பணிகள் நிறைவு:

அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில் ரயிலில் சிக்கியிருந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்:

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்,”ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் குறித்து முதல்வர் சர்ஃபராஸ் புக்தியுடன் பேசினேன். இந்த கொடூரமான சம்பவத்தில் அப்பாவி உயிர்களை இழந்த நம் நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தானின் உறுதியை அசைக்க முடியாது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தியா-மோரீஷஸ் பிரதமா்கள் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையொப்பம்!

போா்ட் லூயிஸ்: கடல்சாா் பாதுகாப்பு, வா்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-மோரீஷஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பாகின. மோரீஷஸ் தலைநகா் போா்ட் லூயிஸில் பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் - ரஷியா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்புப் போராட்டத்தில் 30 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சில பிணைக் கைதிகள்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் ... மேலும் பார்க்க