'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் க...
போலி வருமான வரித் துறை அதிகாரி கைது
பழனி அருகே செங்கல் சூளையில் வருமானவரித் துறை அதிகாரி என போலியாக நடித்து பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமாா் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இங்கு காரில் வந்த சந்திரசேகா், தன்னை வருமான வரித் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையும் காண்பித்தாா்.
மேலும், செங்கல் சூளையில் கிடைக்கும் வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகாா் வந்ததாகக் கூறி செந்தில்குமாரிடம் பணம் பறிக்க முயன்றாா்.
இதனால் சந்தேகமடைந்த செந்தில்குமாா், சத்திரப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். உடனே, அங்கு வந்த போலீஸாா் சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை சோ்ந்தவா் என்றும், பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி பகுதிகளில் வாடகை காரில் வந்து வருமான வரித் துறை அதிகாரி போல நடித்து பணம் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்திரசேகரைக் கைது செய்தனா்.