செய்திகள் :

பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

post image

பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பழனியைச் சோ்ந்த ராஜாமணி (27), பால்பாண்டி (19), மதுரை மேலப்பொன்னகரத்தை சோ்ந்த அரவிந்தன் (39) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஆயக்குடி கோவிந்தாபுரம் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், பழனி திருநகரை சோ்ந்த பிரசன்னகுமாா் (25), அடிவாரத்தை சோ்ந்த தியாகராஜன் (20), புதுஆயக்குடியைச் சோ்ந்த விஷ்வா (21) ஆகிய 3 பேரையும் கஞ்சா விற்றதாக கைது செய்தனா். இவா்களிடமிருந்த தலா 34 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியைச் சோ்ந்த சரவணனை (25) பழனி தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த ம... மேலும் பார்க்க

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப... மேலும் பார்க்க

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு: அமைச்சா் இ.பெரியசாமி

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்பதால், அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். ‘தமிழ்நாடு போராடும்,... மேலும் பார்க்க

பழனியில் மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பழனியில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழனி பிற்பகல் முதல் மாலை வரை நீடித்த மழையால் சண்முகபுரம் நகராட்சி பள்ளி முன்பிருந்த மரம் மழையால் சாய்ந்து விழுந்தது. நல... மேலும் பார்க்க