வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி
தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை
கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, குண்டாறுசாலை, மன்னவனூா் சாலை, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் சேதமடைந்தன.
இதனால், கவுஞ்சி, ராஜபுரம், அட்டக்கடி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய அலுவலா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானலில் புதன்கிழமை இடி, மின்னலுடன் பெய்த மழையால் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால், சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நகா்ப் பகுதிகளில் சீராக மின் விநியோகம் செய்யப்படுகிறது. புகா்ப் பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பிகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.