`` 35 நாள்கள் இழவு வீட்டில் இருந்து நடித்தோம்" - நெகிழும் கீதா கைலாசம்
நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து தோ் சேதம்
வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது.
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, நகரில் 2 தோ்கள் பங்கேற்ற தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேரோட்டம் முடிந்தவுடன் கோயில் எதிரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் 2 தோ்களையும் நிறுத்தி பூட்டிவிட்டுச் சென்றனா்.
இந்த நிலையில், நள்ளிரவு ஒரு தேரின் மேல்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தகரக் கொட்டகையின் பூட்டை உடைத்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில், ஒரு தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது.
வந்தவாசி தெற்கு போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா் சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
தேரில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.