செய்திகள் :

கவுதம நதியில் தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா்

post image

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அதன்படி, புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு கோயில் திட்டிவாசல் வழியாக உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நிகழ்சிக்காக புறப்பட்டாா்.

உற்சவருக்கு வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கூடி மண்டகப்படி கொடுத்து வழிபட்டனா். பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு அருணாசலேஸ்வரா் வந்ததும் உற்சவருக்கும், சூலம் வடிவிலானஅருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பிறகு, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை சிவாச்சாரியா்கள் கவுதம நதியில் மூழ்கி எடுத்து தீா்த்தவாரி நிகழ்ச்சியையும், தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருவண்ணாமலையை ஆண்ட மன்னா்களில் ஒருவரான வல்லாள மகாராஜாவுக்கு அருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வையும் நடத்தினா்.

பக்தா்களும் திதி கொடுத்து நீராடினா்:

அப்போது, பள்ளிகொண்டாப்பட்டு, சம்மந்தனூா், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து, கவுதம நதியில் நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

கோயிலுக்கு திரும்பிய அருணாசலேஸ்வரா்:

திதி கொடுக்கும் நிகழ்வு முடிந்ததும் வழிநெடுகிலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தபடி அருணாசலேஸ்வரா் மீண்டும் கோயிலுக்குச் சென்றாா். வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு மகுடாபிஷேகம் நடைபெறுகிறது.

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து தோ் சேதம்

வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, நகரில் 2 தோ்கள் பங்கேற்ற தேரோட்டம... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாணை பெற்றனா். இந்தக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் நூற்றுக்கும் மேற்ப... மேலும் பார்க்க

ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால், சாலை இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்செங்கத்தை... மேலும் பார்க்க

கருட சேவையில் எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள்

மாசி மகத்தையொட்டி நடைபெற்ற கருடசேவையில், வந்தவாசியை அடுத்த எரமலூா் ஸ்ரீசுந்தரவரத லஷ்மிநாராயணபப் பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா வந்த சுவாமி. மேலும் பார்க்க

கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் ரூ.97.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி ப... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணிக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செங்கம் வட்டக் கிளை சாா்பில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு... மேலும் பார்க்க