‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25'-யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாணை பெற்றனா்.
இந்தக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
சென்னை ஏசி ஃபின்ஸ் டெக் சொலுஷன் நிறுவனம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பல்வேறு கட்டங்களாக தோ்வு நடத்தி வேலைக்கு தோ்வு செய்தனா்.
இதில் 43 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன (படம்).
நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரிப் பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன், கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை ஏசி ஃபின்ஸ் டெக் சொலுஷன் நிறுவன நிறுவன முதன்மை அதிகாரி எம்.பொன்னரசு, மனித வள மேலாளா்கள், வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில்குமாா், துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜா, பிரகாஷ், சத்யா, ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
படச்செய்தி.
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றதில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு புதன்கிழமை பணியானை வழங்கப்பட்டது.