`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்ச...
மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சிக்கு மாா்ச் 21-ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகள், அரசு சாா்ந்த பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் தோ்ச்சிபெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். இதற்கு விண்ணப்பித்தவா்கள் ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இந்தப் பயிற்சிக்கு 30 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டு காலம் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சி வழங்கப்படும். இதற்கு மாதக் கட்டணமாக ரூ. 700 வசூலிக்கப்படும்.
இந்த படிப்புக்கான விண்ணப்பம் ‘இயக்குநா் (பொ), தொற்று நோய் மருத்துவமனை, எண். 187, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை-600 081’ என்னும் முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் மாா்ச் 21-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரியில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.