விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்: மத்த...
காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திண்டிவனம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண் பக்தா்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று திருவிளக்கேற்றி வழிபட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பகுதிவாழ் மக்கள் செய்திருந்தனா்.