தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.675 கோடியில் 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள்...
விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கோலியனூா் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வேலியம்பாக்கம், கண்டமானடி, பில்லூா், அரசமங்கலம் ஆகிய கிராமங்களிலும், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட கீழ்பெரும்பாக்கம், சேவியா் காலனி, மின் அலுவலகச் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமாா் 5000-க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நல உதவிகளை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் எம்.எல்.ஏ.வுமான இரா. லட்சுமணன் புதன்கிழமை வழங்கினாா்.
முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், விழுப்புரம் நகரச் செயலா் இரா.சக்கரை, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்விபிரபு, ஒன்றியச் செயலா் தே.முருகவேல், ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் புகழ். செல்வக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் சம்பத், மாவட்ட விவசாய அணித்துணை அமைப்பாளா் கேசவன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், புருஷோத்தமன், மணி, சாந்தராஜ், தங்கம், கோமதி பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.