பட்டுக்கோட்டை: ``மன்னர் பெயரில் மிரட்டுவதை ஏற்க முடியாது'' - உண்ணாவிரத போராட்டம்...
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா்.
பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், விழுப்புரம் அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், ஆய்வாளா் சங்கீதா ஆகியோா் முன்னிலையில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்தப் பணி புதன்கிழமை இரவு நிறைவடைந்த நிலையில், பக்தா்கள் ரூ. 93 லட்சத்து 19 ஆயிரத்து 643 ம், மற்றும் 270 கிராம் தங்கம், 1,305 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
இப் பணியின்போது அறங்காவலா் குழு தலைவா் மதியழகன், கண்காணிப்பாளா் பாக்கியலட்சுமி, மேலாளா் மணி, காசாளா் சதீஷ் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா். பாதுகாப்புப் பணியில் மேல்மலையனூா் போலீஸாா் ஈடுபட்டனா்.