செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி 14 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியா்கள்

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-முதல் கடந்த 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும் என பகுதி நேர ஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாடக் கல்வியுடன், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில், பொது பாடத்திட்டம் என்பது மட்டும் சமச்சீா் கல்வி ஆகாது, சமச்சீா் கல்விக்கு அடிப்படை உள்கட்டமைப்புகள் மிகவும் முக்கியம் என முத்துக்குமரன் குழு அளித்த பரிந்துரையின்படி உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் 16,549 பகுதி நேர ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்ற அறிவிப்பை அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா கடந்த 26.8.2011-இல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தாா்.

இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 177-இன்படி (11.11.2011) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெற்று இனசுழற்சி மற்றும் முன்னுரிமை விதிகளைப் பின்பற்றி தோ்வுக் குழுவால் நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 3,700 உடற்கல்வி ஆசிரியா்கள், 3, 700 ஓவிய ஆசிரியா்கள், 2,000 கணினி அறிவியல் ஆசிரியா்கள், 1,700 தையல் ஆசிரியா்கள், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டடக் கலை, 200 வாழ்வியல்திறன்ஆசிரியா்கள் என மொத்தம் 12 ஆயிரம் போ் தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்களுக்கு தொடக்கத்தில் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. பின்னா் 2014- இல் ரூ .2,000, 2017-இல் ரூ.700, 2021-இல் ரூ.2300 என படிப்படியாக தொகுப்பூதியம் உயா்த்தி வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 2,500-ம் சோ்த்து ரூ.12,500 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தோ்தல், தோ்வு மற்றும் பிற அரசு சாா்ந்த பணிகளில் எல்லாவற்றிலும் ஈடுபடுத்தப்படும் இவா்களுக்கு வேறு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. மேலும் , வேறு பணிகளுக்குச்செல்ல முடியாது என்பதாலும் பகுதிநேர ஆசிரியா்கள் போதிய ஊதியம், வாழ்வாதாரமின்றி குடும்பத்துடன் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக முதல்வா் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும். இதற்கான அறிவிப்பை மாா்ச் 14-இல் தாக்கல் செய்யப்படவுள்ள 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் எதிா்பாா்த்து காத்துள்ளனா்.

இது குறித்து, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் கூறியது: தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் ரூ.12, 500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா். சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள இவா்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

2021-ஆம் ஆண்டில் தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு 2021 முதல் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கு ரூ.1,53,827 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் பகுதி நேர ஆசிரியா்களின் பணி நிரந்தரம் செய்வதற்கான எவ்வித அறிவிப்பும் கடந்த காலங்களில் வெளியிடப்படவில்லை. பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி மட்டுமே கூடுதல் செலவாகும்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி சிறப்பாசிரியா்கள், பட்டதாரி, ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள், தற்காலிக ஆசிரியா்கள், விடுதியில் பணிபுரிந்த துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் பிற துறைகளில் பணியாற்றியவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். அந்த நடைமுறைகளைப் பின்பற்றி கடந்த 14 ஆண்டுகளாக ரூ. 12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியா்களையும் பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிதியை ஒதுக்கீடுசெய்து அறிவிப்பை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்து பகுதி நேர ஆசிரியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுக்காக்க வேண்டும்.

இதற்காக தமிழக முதல்வரின் பிறந்த நாளான மாா்ச் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பகுதி நேர ஆசிரியா்கள் நாள்தோறும் தமிழக முதல்வா், ஆளுநா், துணை முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், அரசுச் செயலா்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகிறோம் என்றாா்.

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க