கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செய்யறிவு(ஏஐ) படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"செய்யறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளில் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். அதன்படி, அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செய்யறிவு(ஏஐ) படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
ரூ. 50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
ரூ. 65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
பள்ளி பாடத் திட்டத்தில் சதுரங்கம் சேர்க்கப்படும்.
8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலை கல்லூரிகள் அமைக்கப்படும்.
திசையன்விளை, மணப்பாறையில் புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
1 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க உறுதி.
ரூ. 56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
பட்ஜெட்: சென்னை வேளச்சேரியில் 3 கிமீ தூரத்துக்கு புதிய மேம்பாலம்!
ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை
அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்" என்றார்.