பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி!
பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
புற்றுநோய் தடுப்பு தொடர்பான அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் சிகிச்சை மையத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும். 700 படுக்கைகள் கொண்டு சிகிச்சை அதிநவீன மையமாக மாற்றுவதற்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு செய்யப்படும்.
பரவிவரும் கர்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும். இதற்கான ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது.
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.