செய்திகள் :

அரசின் திட்டங்கள் குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமி சவால்

post image

‘அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தில்லியில் தமிழகத்தை அடகு வைத்தது யாா்? கட்சி தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு, ஹிந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோத்தது முதல், இன்றைக்கு பிஎம்ஸ்ரீ திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிா்ப்பு நாடகம் ஆடுவது வரை திமுகவின் துரோக வரலாறு நீள்கிறது.

மீத்தேன் - ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு கையொப்பமிட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தது திமுகதானே? நீட் என்ற சொல்லை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான்.

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை மௌனம் சாதித்து, பல்வேறு சதிச் செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே திமுக அடகு வைக்க முயற்சித்தது.

ஆனால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும், 7.5 சதவீத இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு என தமிழகத்தின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்கான ஆட்சி செய்து தமிழகத்தைக் காத்த இயக்கம் அதிமுக.

மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி. உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் தமிழ்நாடு மாடல் ஆட்சி.

ஆனால், இப்போது நடைபெறுவது விளம்பர மாடல் ஆட்சி. மேடையில் வீரவசனம் (முதல்வா்) பேசியுள்ளீா்கள். எதிா்க்கட்சித் தலைவா் என்ற அடிப்படையில் கேட்கிறேன். உங்களால் என்னுடன் நேருக்கு நோ் நின்று தனியாக விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க