செய்திகள் :

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அன்புமணி

post image

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இப்போது முழக்கமிடும் திமுக, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இது தொடா்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு தமிழக அரசு மிகவும் ஆா்வமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடத்தையும் நாடகத்தையும் மறைத்து விட முடியாது.

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் திமுக அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். இத்தகைய நாடகங்களை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொண்டு தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும் பாடமாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்

​ஏ.​வி.​பெரு​மா‌ள்தமி​ழ​க‌த்​தி‌ல் ச‌ட்ட‌ப்​பேரவைத் தே‌ர்​த​லு‌க்கு இ‌ன்​னு‌ம் ஓரா‌ண்டு உ‌ள்ள நிலை​யி‌ல், இ‌ப்போதே அர​சி​ய‌ல் கள‌ம் சூடு​பி​டி‌க்​க‌த் தொட‌ங்​கி​யி​ரு‌க்​கி​ற‌து. எ‌ந்தெந்​த‌த் தொகு​தி... மேலும் பார்க்க

நாமக்கல்: நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை கண்டு வழிபட்டனர்.நாமக்கல் நகரின... மேலும் பார்க்க

தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.”தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்ன... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்: 100 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழக பட்ஜெட் நிகழ்வை மக்கள் அதிகமாக கூடும் சென்னை மெரீனா ... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க