`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்ச...
வேளாண் அறிவியல் மையத்தில் ஆலோசனைக் கூட்டம்
செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம வளா்ச்சி நிறுவனத்தின் தலைவா்.ச.ரமேஷ் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் வே.சுரேஷ் வரவேற்றாா்.
கூட்டத்தின் போது, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநா் பி.பி.முருகன், ஐதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன், மத்திய உவா்மீன் ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி குமரன், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் விஜய் நிகா் ஆகியோா் இணையவழி மூலம் பங்கேற்று விவசாயிகளின் வளா்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, வாழவச்சனூா் வேளாண் கல்லூரி பேராசிரியா் எஸ். பாபு, அத்தியேந்தல் சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியா் எம். வைத்தியலிங்கம், கால்நடை அறிவியல் பயிற்சி மையத்தின் உதவி பேராசிரியா் தேவராஜன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தெரிவித்தனா்.
அக்ரிஜஸ்மாா்ட் மொபைல் செயலி அறிமுகம்:
நிகழ்ச்சியின் போது சென்னை இன்ஸ்டூட்டு பொறியியல் மாணவா்களால் தயாரிக்கப்பட்ட, வேளாண் அறிவியல் மையத்தின் சாா்பில் அக்ரிஜஸ்மாா்ட் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் செயலி மூலம் இயற்கை வேளாண்மை, இடுபொருள்கள் உற்பத்தி ஆகியவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்றனா்.
இதைத் தொடா்ந்து, கூட்டு மீன் வளா்ப்பு, பழங்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப கையேடுகளை சிறப்பு விருந்தினா்கள் வெளிட்டனா்.
நிறைவில் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப அலுவலா் த.மாா்க்ரெட் நன்றி கூறினாா்.