செய்திகள் :

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

post image

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்த விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை போன்ற தமிழக  நலன்களுக்கு எதிரான விஷயங்களில் திமுக அரசு தொடர்ந்து நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.

மும்மொழிக் கொள்கை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க விருப்பம் தெரிவித்து மத்திய பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் சஞ்சய் குமாருக்கு கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி தமிழக அரசின் அன்றைய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று இப்போது வீரமுழக்கமிடும் திமுக, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், ’’தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கான வாக்குமூலம்தான் இது என்பதை புரிந்துகொள்ள வல்லுனர்களின் பொழிப்புரையெல்லாம் தேவையில்லை.

இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!

அதுமட்டுமின்றி, அந்தக் கடிதம் மத்திய அரசுக்கு எழுதப்பட்டதன் நோக்கமே எப்படியாவது மத்திய அரசின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அந்தக் கடிதத்தில், வல்லுனர் குழு பரிந்துரையைப் பெற்று  2024-25ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்; அதனால் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதியை எங்களுக்கு உடனே வழங்குங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.  இந்தக் கடிதம்  எழுதப்பட்ட தொனியை வைத்துப் பார்த்தாலே  பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்துகொள்ள தமிழக அரசு தயாராகிவிட்டதை அறியமுடியும்.

அதுமட்டுமின்றி, தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் நாள் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமின்றி, ’’பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020-இன்படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள். தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படி எதுவும் செய்யவில்லை.  மாறாக, நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதே திமுக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனம் எழுந்தது.  இப்படியாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு 100% தயாராகிவிட்ட தமிழக அரசு, இப்போது புனிதர்களைப் போல நாடகமாடுகிறது.

இதையும் படிக்க | தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடத்தையும், நாடகத்தையும்  மறைத்துவிட முடியாது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான கடிதம் இரு ஊராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு இடையே எழுதப்பட்ட கடிதம் அல்ல; தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகும். அதில் உள்ள விவரங்களுக்கு திமுகவினர் அவர்கள் விருப்பம்போல பொழிப்புரை எழுத முடியாது.

தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை இல்லை என்று தமிழக அரசால் மறுக்க முடியுமா?

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதன் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையவுள்ள நிலையில், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் திமுக அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இத்தகைய நாடகங்களை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு கல்வித்துறையில் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில்  அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும் பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

அதீத உணவுகளை சாப்பிட்டு அதனை டிக்டாக் விடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உடல் பருமனால் மரணமடைந்துள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் எஃபெகான் குல்தூர் (வயது 24)... மேலும் பார்க்க