`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!
அதீத உணவுகளை சாப்பிட்டு அதனை டிக்டாக் விடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உடல் பருமனால் மரணமடைந்துள்ளார்.
துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் எஃபெகான் குல்தூர் (வயது 24), இவர் டிக்டாக் செயலியில் அதீத உணவுகள் சாப்பிட்டு அதனை விடியோவாக (முக்பங் விடியோ) வெளியிட்டு டிக்டாக் பயணாளர்களிடையே மிகவும் பிரபலமானார். குல்தூரின் முக்பங் விடியோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி அவரது டிக்டாக் கணக்கில் 1,56,000 பேரும் இன்ஸ்டாகிராமில் 12,000 பேரும் அவரை பின் தொடர்கிறார்கள்.
இந்நிலையில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தினால் தொடர்ந்து உடல் பருமனடைந்த அவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். மேலும், சுவாசக் கோளாறினால் அவதிப்பட்ட அவர் கடந்த சில காலமாக படுத்த படுக்கையாக ஆனார்.
இதையும் படிக்க:அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!
இதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சையளிக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், கடந்த மார்ச்.7 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது நண்பரும் மற்றொரு டிக்டாக் பிரபலமுமான யாசின் ஒயானிக் தெரிவித்துள்ளார்.
தனது இறுதி விடியோவை அவர் கடந்த 2024 அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்த நிலையில் அதில் தான் உணவு கட்டுப்பாட்டில் (டையட்டில்) இருப்பதாகக் கூறியிருந்தார்.
முன்னதாக, தென் கொரியா நாட்டிலிருந்து துவங்கிய அதீத உணவு சாப்பிட்டு பதிவு செய்யப்படும் பிரபல முக்பங் விடியோக்கள் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.