தேசிய இளையோர் தடகளம்: 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை!
இனி மாட்டுப்பாலுக்கு பதிலாக கரப்பான்பூச்சிப் பாலா? - என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?
தலைப்பைப் படித்தவுடன் அருவருப்பாக இருந்தாலும், டிப்லாப்டெரா பவுன்டேட் (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப்பாலில், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிகமான சத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பசிபிக் வண்டான டிப்லாப்டெரா பவுன்டேட் கரப்பான் பூச்சி இனத்தைச் சேர்ந்தது. அதன் குஞ்சுகளுக்கு உணவளிக்க ஊட்டச்சத்து நிறைந்த பால் போன்ற பொருளை உற்பத்தி செய்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாலில் அனைத்து அத்தியாவசியமான அமினோ ஆசிட்கள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் நிரம்பிய புரதங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இது பசுவின் பாலைவிட நான்கு மடங்கு அதிக ஊட்டச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுவரைக்கும் இலை, பெர்ரி, நட்ஸ், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்குத்தான் ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் ஃபுட் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் தற்போது இந்த பசிபிக் வண்டின் பாலும் இடம்பெற தகுதியானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக இது காணப்படுகிறது. 2016-ம் ஆண்டு Journal of the International Union of Crystallography வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் எருமை பாலைவிட கரப்பான் பூச்சியின் பால் அதிக ஊட்டச்சத்து நிறைந்த ஓர் உணவு என்று சொல்லியிருந்தது இந்த இடத்தில் குறிப்பிடத்தகுந்தது.
பெரும்பாலான கரப்பான் பூச்சி இனங்கள் போலல்லாமல், பசிபிக் வண்டு முட்டையிடாது. மாறாக, இளம் புழுக்களை ஈனும். இளமையாக வாழப் பிறக்கிறது. அதன் கருக்களை வளர்க்க, தாய் தனது அடைகாக்கும் பைக்குள் வெளிர் மஞ்சள் நிறத்தில் பால் போன்ற திரவத்தை சுரக்கிறது. இந்த திரவமானது இளம் பூச்சியின் வயிற்றில் படிகங்களை உருவாக்குகிறது. இதுவே கரப்பான் பூச்சிப் பால் உருவாக காரணமாக இருக்கிறது.

அதிக புரதச்சத்து நிறைந்த இன்னொரு பால் கிடைத்துவிட்டது என்று நாம் மகிழ்ந்துவிட முடியாது. இன்னும் இது உண்ணத்தகுந்த உணவு என்று ஆராய்ச்சியாளர்கள் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. இதில் அதிக புரதம் உள்ளது என்பது மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சிப்பால் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அதன் திறனை புறக்கணிக்க முடியாது. விஞ்ஞானிகள் அதன் பயன்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். எல்லா சூப்பர் ஃபுட்ஸை போலவே, கரப்பான் பூச்சிப்பால் சந்தைக்கு வரும்போது சமச்சீர் உணவுக்கு துணையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.