செய்திகள் :

1988-ல் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் - தற்போதைய மதிப்பு இத்தனை லட்சமா?

post image

சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லான் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது 1988ல் வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் குறித்த ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளார்.

கார் ஆர்வலரான இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ``இது குறித்து யாரேனும் அனுபவம் உள்ளவர்கள் கூற முடியுமா? இதனை எனது வீட்டில் கண்டுபிடித்தோம், விளக்கமாக கூறுங்கள்" எனப் பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

பல பங்கு சந்தை நிபுணர்கள் தங்களின் கருத்துக்களை அந்தப் பதிவில் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில இணையவாசிகள் அவருக்கு கொள்ளை லாபம் என்று பதிவில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் சரியான பங்கு சந்தை நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். 1988ல் 10 ரூபாய்க்கு வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், தற்போது சுமார் 11 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவரது பங்கின் தற்போதைய விலைத்தொகையை நாம் பெற முடியுமா?

பங்கிற்கான கணக்கு வைத்திருப்பவர் தனக்கான நாமினியை நியமித்தால் அசல் பங்குதாரர் இறந்த பிறகு அவரது இறப்புச் சான்றை பதிவு செய்து நாமினி அதற்கான பணத்தை பெறலாம். அல்லது அவர்களின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், பங்குகள் நாமினியின் டெபாசிட்டரி பங்கேற்பாளர் கணக்கிற்கு மாற்றப்படும்.

ஒருவேளை ஷேர் வாங்கியவர் அதாவது பங்கு வாங்கியவர் எந்த நாமினியும் நியமிக்கவில்லை என்றால், பங்குகளை சுமுகமாக மாற்றுவதற்கு சிறந்த பங்கு சந்தை நிபுணர்களின் ஆலோசனை கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மாட்டுப்பாலுக்கு பதிலாக கரப்பான்பூச்சிப் பாலா? - என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

தலைப்பைப் படித்தவுடன் அருவருப்பாக இருந்தாலும், டிப்லாப்டெரா பவுன்டேட் (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப்பாலில், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிகமான சத்திருக்க... மேலும் பார்க்க

கர்நாடகா: 'கம்பாலா' திருவிழா... சேறும் சகதியுமான நெல் வயல் பாதையில் சீறி பாய்ந்த எருமைகள்! | Album

கம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா ... மேலும் பார்க்க

`யார் இந்த தண்ணீரை குடிப்பார்கள்?'- கும்பமேளாவிலிருந்து கொண்டுவந்த நீரை குடிக்க மறுத்த ராஜ் தாக்கரே!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் நகரில் 45 நாள்கள் நடந்த கும்பமேளாவில் 65 கோடி பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இக்கும்பமேளாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தவறவில்ல... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `இளையராஜா சிம்பொனி டு ஆஸ்கர் விருதுகள்' - இந்த வார ஆட்டத்துக்கு ரெடியா!?

இளையராஜா சிம்பொனி, ஆஸ்கர் விருதுகள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள... மேலும் பார்க்க

வீட்டினுள் மனைவிக்கு ஏசியுடன் சமாதி; மறைவுக்குப் பிறகும் காதலை வெளிப்படுத்து அன்பான கணவர்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார்.கான்கிரட்... மேலும் பார்க்க

Baba Kalyani: தாய்க்குச் சமாதி கட்டுவது யார்? சகோதரியை எதிர்த்து நீதிமன்றம் போன பாபா கல்யாணி

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாபா கல்யாணி. கல்யாணி குரூப் ஆப் கம்பெனிகளின் உரிமையாளரான பாபா கல்யாணி தனது பெற்றோர் இறந்த பிறகுச் சொத்தைப் பிரித்துக்கொள்வதில் தனது சகோதரி சுகந்தாவுடன் பிரச்னை ஏ... மேலும் பார்க்க