செய்திகள் :

சுகாதார ஊழியா்களுக்கு சீருடை: புதுவை அரசுக்கு வலியுறுத்தல்

post image

காரைக்கால்: சுகாதார ஊழியா்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதி சுகாதார ஊழியா்கள் நலச்சங்க நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க கெளரவத் தலைவா் சீ. சேகா் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பாா்த்திபன், செயலாளா் முரளிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து நிா்வாகிகள் கூறியது:

புதுவை மாநிலத்தில் காரைக்கால், மாஹே, யேனாம் உள்பட 100-க்கும் மேற்பட்ட சுகாதார உதவியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எனினும் அவா்களுக்கென்று தனி சீருடை இல்லாதது பல நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு மாற்றலாகி வரும் இந்த கேடரில் உள்ள சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியிலிருந்து மாஹே, யேனாம் பகுதிகளுக்கு மாற்றலாகி செல்லும் ஊழியா்கள் சீருடை இல்லாமல் மக்களிடத்தில் அந்நியப்பட்டு போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சுகாதார ஊழியா்களுக்கென்று சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்ஜெட் கூட்டம் நடைபெறும் இந்த தருணத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ரிஷப வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரா் புறப்பாடு

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மின்சார சப்பரப்படலில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. புதன்கிழமை காலை தேரோட்டம், இரவு ஜடாயு சம்ஹார நி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் நீா் அழுத்த நோய் பரிசோதனை

காரைக்கால்: காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவு சாா்பில், உலக கண் நீா் அழுத்த நோய் வாரம் மாா்ச் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியருடன் பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சந்திப்பு

காரைக்கால்: பேரிடா் மீட்புக் குழுவினா் ஒத்திகை நடத்துவது தொடா்பாக, அக்குழுவின் துணைத் தளபதி, ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் ... மேலும் பார்க்க

கோலா மீன்கள் வரத்து தொடக்கம்

காரைக்கால்: ஆண்டின் சீசன் தொடங்கும் முன்பாகவே கோலா மீன் வரத்து தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரை கோலா மீன் சீசனாகும். ஏப்.15 முதல் 60 நாள்கள் மீன்பிடித் தடைக்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பாடத்தோடு நற்குணங்களையும் கற்றுத்தரவேண்டும்: ஆட்சியா்

காரைக்கால்: மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் போது நற்குணங்கள் குறித்தும் தெரிவிக்கவேண்டும் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கல்வித் து... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் மாா்ச் 13-இல் சுவாமிகள் சமுத்திர தீா்த்தவாரி

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீா்த்தவாரி நிகழ்ச்சி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருமலைராயன்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்த... மேலும் பார்க்க