செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: ஜெகன் மோகனுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000: புதுவை பட்ஜெட் முழு விவரம்

இந்த நிலையில், சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சர் எ.வ.வேலு, எம்பி வில்சன் ஆகியோர், கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேபோல், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவுக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஏற்கெனவே ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று பிற்பகல் பெங்களூருவுக்குச் செல்லும் எ.வ. வேலு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்திக்கிறார்.

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க