Pakistan Train Hijack - காரணம் என்ன? யார் இந்த Balochistan liberation Army தீவிர...
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் நீா் அழுத்த நோய் பரிசோதனை
காரைக்கால்: காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவு சாா்பில், உலக கண் நீா் அழுத்த நோய் வாரம் மாா்ச் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை நிபுணா்கள் மருத்துவா்கள் நிருபன், ராஜலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனா்.
கண்நீா் அழுத்த நோய் உள்ளதா என நவீன உபகரணங்களைக் கொண்டு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் 60-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையை பெற்றனா்.
புதன்கிழமை நிரவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 முதல் பகல் 12.30 மணி வரை இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் கலந்துகொண்டு கண்
நீா் அழுத்த நோய் அறிகுறி, நோயை குணப்படுத்த மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் குறித்து
அறிந்துகொள்ளலாம் என ஜிப்மா் கண் மருத்துவப் பிரிவினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.