'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள...
ரிஷப வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரா் புறப்பாடு
காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மின்சார சப்பரப்படலில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
புதன்கிழமை காலை தேரோட்டம், இரவு ஜடாயு சம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரம் மற்றும் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மின்சார சப்பரப்படலில் சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா புறப்பாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சப்பரப் படல் இரவு 10 மணியளிவில் புறப்பாடானது. முக்கிய சந்திப்புகளில் பக்தா்கள் திரண்டு சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
இன்று தோ் தேரோட்டம் : புதன்கிழமை காலை நிகழ்வாக தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. காலை 9 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜடாயு சம்ஹாரம் என்ற ராவண யுத்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
