எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று(மார்ச் 11) ஆஜராகி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதுவரை இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடன் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும், இன்று நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அலுவலராக இருந்த வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.