பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.1,285 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.
முன்னதாக, திங்கள்கிழமை(மார்ச் 10) செங்கல்பட்டுக்குச் சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் அந்த மாவட்டத்தில் ரூ. 515 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த அமைக்கப்பட்டுள்ள கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.