எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு
ஹோலி: `வரும் வெள்ளி அன்று இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்’ - யோகி ஆதித்யநாத் பேசியதென்ன?
எதிர்வரும் மார்ச் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலிப் பண்டிகை வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முஸ்லிம்களுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதில், ``மார்ச் 14, வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு செல்ல விரும்பும் முஸ்லிம்கள் அதை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே தொழுதுகொள்ளுங்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை பள்ளிவாசலுக்குச் தொழச் செல்பவர்கள் வண்ணங்களை தவிர்க்கக் கூடாது." என்றார்.

யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு விளக்கமளித்துப் பேசிய சம்பல் சிஓ அனுஜ் சவுத்ரி, `` ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை வரும் பண்டிகையாகும். அதேசமயம் ஆண்டுக்கு 52 முறை வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும். ஹோலியின் வண்ணங்களை யாரேனும் அசௌகரியமாக உணர்ந்தால், அந்த நாளில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும். வெளியில் வருபவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும், ஏனெனில் பண்டிகைகள் ஒன்றாகக் கொண்டாடப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத நல்லிணக்கம் மற்றும் கடுமையான கண்காணிப்பு தேவை. ஹோலி கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்காக ஒரு மாதமாக அமைதிக் குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாதவர்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இஸ்லாமியர்கள் ஈத் பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருப்பது போல, இந்துக்கள் ஹோலியை எதிர்நோக்குகிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி, இனிப்புகளை பகிர்ந்துகொண்டு, மகிழ்ச்சியை பரப்பி கொண்டாடுகிறார்கள். அதேபோல், ஈத் அன்று, மக்கள் சிறப்பு உணவுகளை தயாரித்து ஒருவரையொருவர் கட்டித்தழுவி கொண்டாடுகிறார்கள். இரு பண்டிகைகளின் சாராம்சம் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதைதான்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
