தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீ...
2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் முழங்கால் காயத்தால் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகியது விரக்தியாக இருப்பதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
3 போட்டிகள் முடிந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த போட்டி டிச.26ஆம் தேதி தொடங்குகிறது.
2021- 2023 முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறும் இலங்கை உடனான தொடரில் விலையாடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹேசில்வுட்.
விரக்தியாக இருக்கிறது
பிரிஸ்பேனில் ஏற்பட்ட காயத்தினால் தொடரிலிருந்து விலகியது குறித்து சேனல் செவனுக்கு அளித்த பேட்டியில் ஹேசில்வுட் கூறியதாவது:
நிஜமாகவே விரக்தியாக இருக்கிறது. டெஸ்ட்டில் விளையாட அனைத்து கட்டங்களையும் சரியாக நிரப்பி வந்தேன். மீண்டும் என்னாலே இந்த காயம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இது தொடர்பின்றி உருவான பின்கால் தசைப் பிடிப்பாக இருக்குமென நினைக்கிறேன். நிச்சயமாக என்னப் பிரச்னை என்பதை ஆழகாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
எனக்கு முழங்கால் தசைப்பிடிப்பு, சைடு ஸ்டிரைன் (பக்க தசை திரிபு) என்ற 2 பிரச்னைகள் பலகாலமாக இருந்து வருகின்றன. முக்கியமாக 4 வருடங்களில் இது பல தொடர்களில் இருந்து வெளியேற்றுகிறது. இருப்பினும் உடற்பயிற்சி கூடத்தில் சென்று இதை சரியாக்குவேன்.
அடுத்த இலக்கு இலங்கை தொடர்
கடைசி 12 மாதங்களில் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறேன். இது வெறுமனே 2-3 வாரங்களுக்கான காயம். ஆனால், இதனால் மிகப்பெரிய போட்டிகளை இழப்பது விரக்தியாக இருக்கிறது.
அடுத்து இலங்கை தொடரில் விளையாடுவதுதான் திட்டம். அதனால், அடுத்த சில வாரங்களுக்கு எதுவும் அவசரப்படுத்தாமல் இருக்க வேண்டும். இன்னும் சில நாள்கள் அங்குமிங்குமாக சில விஷயங்களை செய்து எல்லாவற்றையும் சரியாக்க வேண்டும் என்றார்.
33 வயதாகும் ஹேசில்வுட் 72 டெஸ்ட் போட்டிகளில் 279 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.