செய்திகள் :

பிபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி!

post image

பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி முதல்முறையாக பிபிஎல் (வங்கதேச பிரீமியர் லீக்) தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஃபார்ட்யூன் பரிஷல் அணிக்காக வரவிருக்கும் சீசனில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆவது பிபிஎல் தொடர் வரும் டிச.30ஆம் தேதி தொடக்குகிறது. இதில் ஜன.15 வரை விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது.

24 வயதாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 31 சர்வதேச டெஸ்ட்டில் 116 விக்கெட்டுகளும் 57 ஒருநாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளும் 75 டி20களில் 100 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

பிபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடவிருக்கிறார்.

ஃபார்ட்யூன் பரிஷல் அணியில் கைல் மேயர்ஸ், டேவிட் மலான், முகமது நபி, ஃபஹீம் அஸ்ரஃப், அலி முகமது, ஜகந்நாத் கான், ஜேம்ஸ் ஃபுல்லர், பதும் நிசங்கா, ஆண்ட்ரே பர்கர் ஆகியோரும் நேரடியான ஒப்பந்தத்தில் விளையாடவிருக்கிறார்கள்.

இந்த அணியில் வங்க தேச வீரர்களான தமிம் இக்பால், டவ்ஹித் ஹிரிதோய், முஷ்ஃபிகுர் ரஹிம், மஹ்மதுல்லா ரியாத், தன்வீர் இஸ்லாம், நஸ்முல் ஹைசைன் ஷாண்டோ, ரிபோன் மோன்டோல், நயீம் ஹாசன், ரிஷாத் ஹொசைன், டைஜுல் இஸ்லாம் ஆகியோரும் இருக்கிறார்கள்.

பிபிஎல் தொடரில் 7 அணிகள் விளையாடுகின்றன. டிச.30 - பிப்.7ஆம் தேதிவரை இந்தப் போட்டிகள் நடைபெறும்.

சா்கேரிபீல்ட் சோபா்ஸ் விருது ஏற்படுத்தப்பட்டபின் முதன்முறையாக இந்த விருதினைப் பெற்ற பாகிஸ்தான் வீரா் என்ற சிறப்பையும் ஷாஹீன் ஷா பெற்றறுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக பல முக்கியமான போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடாமல் போனது அவருக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் அணிக்கும் துரதிஷ்டமானது என வர்ணனையாளர்கள் பலரும் கூறியுள்ளார்கள்.

24 வயதில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் 329 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணித்தேர்வு குறித்து மறக்க நினைக்கிறேன்: ஆஸி. இளம் வீரர்!

ஆஸ்திரேலியாவின் இளம் பேட்டர் நடப்பு பிஜிடி தொடரில் தேர்வாகாததை மறக்க நினைப்பதாகக் கூறியுள்ளார். 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான போட்டிகள் பாக்.கில் நடைபெற்றது: ஐசிசி!

சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை விரைவில் வெளியாகும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரண... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் முழங்கால் காயத்தால் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகியது விரக்தியாக இருப்பதாக இருப்பதாகக் கூறியுள்ளார். 3 போட்டிகள் முடிந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் ... மேலும் பார்க்க

பாக். டெஸ்ட் தொடர்: தெ.ஆ. அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.டி20 தொடரை வென... மேலும் பார்க்க

கேசவ் மகராஜ் விலகல்: தெ.ஆ.வுக்கு பின்னடைவு!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ... மேலும் பார்க்க

கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.விஜய் ஹசாரே தொடர் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த அணிகள் தங்களது வீரர்கள் குறித்த அணி விவரத்தை அ... மேலும் பார்க்க