தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீ...
ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
மாநிலங்களவையில், அவை நடவடிக்கைகளின்போது, கட்சி பாகுபாட்டுடன், ஜகதீப் தன்கர் நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே, அவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சமாஜ்வாதி, திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 60 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.