முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `போலீஸா, இயக்கமா...’ - கீழ்குவாகம் ராமசாமி யார் ...
பிக் பாஸ் 8: போட்டியைவிட்டு வெளியேறிய அன்ஷிதா!
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை அன்ஷிதா வெளியேறுவதைப் போன்ற முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றுவரும் வீடு கட்டும் போட்டியில் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட மோதலால், மன உளைச்சலுக்கு ஆளான அன்ஷிதா, தனது போட்டிக்கான சீருடையைக் கழற்றி எரிந்துவிட்டு வெளியேறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 74வது நாளை எட்டியுள்ளது. 11வது வாரத்தின் கேப்டனாக வி.ஜே. விஷால் செயல்பட்டு வருகிறார்.
இதனிடயே இந்த வார டாஸ்க்காக வீடு கட்டும் போட்டி பிக் பாஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வீட்டில் உள்ள 13 போட்டியாளர்கள் 3 பேர் கொண்ட அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர்.
விபரீதத்தில் முடியும் விளையாட்டு
மூன்று நாள்களுக்கு நடைபெறும் இப்போட்டி இரண்டு நாள்களைக் கடந்துள்ளது. கடந்த இரு நாள்களுமே மோதலும் சச்சரவுமாகவே முடிந்தது.
மஞ்சரியுடன் அணிசேர்ந்து விளையாடிய ராணவ்வுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பின்னர் மருத்துவர் அறிவுரைப்படி போட்டியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
நேற்றைய போட்டியில் தீபக்கை கீழே தள்ளிவிட்டார் ஜெஃப்ரி. ஆனால், அது தெரியாமல் நடந்ததாக ஜெஃப்ரி மன்னிப்பு கோரினார். இதேபோன்று ரஞ்சித், கற்களை தூக்கி வீசியதில், அருண் பிரசாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது.
கோபத்தில் அன்ஷிதா
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்றும் போட்டி கடுமையாகியுள்ளது. மாதிரி படத்தைக் கொடுத்து அதில் உள்ளதைப் போன்று கற்களை வீடு போன்று அடுக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவுறுத்தியிருந்தார்.
இந்தப் போட்டியின்போது ஒரு அணியினர் மற்ற அணியிடமிருந்து கற்களை லாவகமாக எடுக்கலாம் என்பதால் மற்ற அணியினர் கற்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், அன்ஷிதா அணியில் இருந்த பவித்ரா கடுமையாகப் போராடி மற்ற அணியிடமிருந்து கற்களைக் காப்பாற்றினார். இதில் பவித்ரா நிலைகுலைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அன்ஷிதா, ஜாக்குலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். போட்டியின்போது ஏன் மேலே கை வைக்கிறாய்? என ஜாக்குலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
சக போட்டியாளர்கள் அனைவரும் அன்ஷிதாவை தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், ஜாக்குலின் நடிப்பதாகக் கூறும் அன்ஷிதா, ஒருகட்டத்துக்கு பிறகு மைக்கை கழற்றிவிட்டு, போட்டிக்கான சீருடையையும் கழற்றி எரிந்துவிட்டு போட்டியிலிருந்து விலகுவதைப் போன்று வீட்டிற்குள் புறப்படுகிறார்.
மற்ற போட்டியாளர்கள் தடுக்க முயன்றும், அன்ஷிதா போட்டியிலிருந்து விலகுவதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.