கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு: கொமுக தலைவா் பெஸ்ட் ராமசாமி
டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!
புதுதில்லி: வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஆரம்ப பங்கு விற்பனையானது (ஐபிஓ) டிசம்பர் 20ஆம் தேதியன்று, பங்கு ஒன்றுக்கு ரூ.610 முதல் ரூ.643 என்ற விலையை நிர்ணயித்தது, பொதுமக்களிடம் சப்ஸ்கிரிப்ஷனுக்காக பட்டியலிடப்படுகிறது.
இதன் ஆரம்ப பங்கு விற்பனை டிசம்பர் 24 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள வேளையில், தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்துள்ள முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ திறவு, டிசம்பர் 19ஆம் தேதியன்று அதாவது ஒரு நாள் முன்பு திறக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!
நிகர ஆரம்ப பங்கு விற்பனை மூலம் வரும் நிதியை, நிறுவனத்தின் கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்க்கும் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் குறைந்தபட்சம் 23 பங்குகள் மற்றும் அதன் பிற மடங்குகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டி ஆனது அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிளாக்ஸ்டோன் மற்றும் பஞ்ச்ஷில் ரியால்டி குழுமத்தின் கூட்டு முயற்சியாகும். தற்போது, வென்டிவ் நிறுவனத்தில் 60 சதவிகித பங்குகளை பஞ்ச்ஷிலும், மீதமுள்ள 40 சதவிகித பங்குகளை பிளாக்ஸ்டோன் வைத்துள்ளது.
நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகள் நிஃப்டி மற்றும் பிஎஸ்இ-யில் பட்டியலிட முன்மொழியப்பட்டுள்ளது.