சண்டைப் பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்!
நடிகரும் சண்டைப் பயிற்சியாளருமான கோதண்டராமன் காலமானார்.
தென்னிந்தியளவில் சினிமா சண்டைப் பயிற்சியாளராக அறியப்பட்டவர் கோதண்டராமன் (65). பகவதி, கிரீடம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இதற்கிடையே, சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
முக்கியமாக, கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை பிரபலம்.
இந்த நிலையில், கோதண்டராமன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.