‘அதற்காக பாலா என்னிடம் அழுதார்..’: மிஷ்கின்
இயக்குநர் பாலாவுடனான நட்பு குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வு நேற்று (டிச. 18) சென்னையில் நடைபெற்றது.
இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: சண்டைப் பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்!
நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “சேது படத்தின் ஒருவரிக் கதையை எழுதியபின்பே என் படத்திற்கான திரைக்கதைகளை எழுத ஆரம்பிப்பேன். என் முதல் நான்கு படங்கள் அப்படி நிகழ்ந்ததுதான். என்னுடைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைப் பார்த்துவிட்டு பாலா நேரில் அழைத்தார். அப்படம் சரியாக ஓடவில்லை. தன்னை பாதித்ததாகச் சொல்லி அழுதார். அதற்கு முன் பாலா அழுது நான் பார்த்ததில்லை. பின், என் தயாரிப்பில் படம் இயக்குகிறாயா எனக் கேட்டார். அந்தத் தருணத்தில் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பாலா” எனத் தெரிவித்தார்.